போலியான துப்பறியும் நிறுவனம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் கைது.!

0 2982

திருச்சி அருகே போலியான துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

செந்தண்ணீர்புரம், எடமலைப்பட்டிப்புதூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த திருச்சி டிடெக்டிவ் ஏஜென்சி (Trichy detective Agency) மூலம் ஏமாற்றப்பட்டதாக முசிறியை சேர்ந்த ஒருவரும், கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவரும் சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி நிறுவனம் நடத்தி பொது மக்களை ஏமாற்றிய கள்ளக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் வசந்த் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments