நெருங்கும் பண்டிகை காலங்களால் கொரோனா பரவும் அபாயம் - நிபுணர்கள் எச்சரிக்கை

0 2541

நாட்டின் சில பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பண்டிகை காலமும் துவங்க உள்ளதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

வரவிருக்கும் குளிர் காலத்தில் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ள நிலையில், மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பண்டிகைகளை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்றும், மழைக்காலத்தின் போது சளி, இருமல் போன்ற வைரஸ் தொற்றுகள் வருவதற்காக வாய்ப்புகள் அதிகம் என்றும் மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments