உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்றியடைய ஒரு லட்சம் போர் வீரர்களை அனுப்ப தயார் - வடகொரியா

உக்ரைனுக்கு எதிரான போரில் வெற்றியடைய ரஷ்யாவுக்கு ஒரு லட்சம் போர் வீரர்களை அனுப்ப தயார் என்று வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரியா அனுப்பும் இந்த வீரர்களை ரஷ்யா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணை தாங்கிய பீரங்கிகளை அமெரிககா வழங்க முடிவு செய்துள்ளதால், வட கொரிய படையின் அனுபவம் மற்றும் போரிடும் திறனை ரஷ்யா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ரஷ்யாவில் கருத்துகள் வலுத்து வருகின்றன.
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற்றால் உக்ரைன் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் பணியாளர்களை அனுப்பி வைக்க வட கொரியா முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments