துணி துவைக்க சென்ற போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 65 வயது மூதாட்டியை பத்திரமாக மீட்ட இளைஞர்கள்..!

0 2319
துணி துவைக்க சென்ற போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 65 வயது மூதாட்டியை பத்திரமாக மீட்ட இளைஞர்கள்..!

கேரளாவின் கொல்லத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 65 வயது மூதாட்டியை இளைஞர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு கயிறு கட்டி மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.

குளத்துப்புழா பகுதியில் உள்ள கல்லடா ஆற்றில் 65 வயதுடைய மூதாட்டி, தனது உறவினருடன் துணி துவைக்க சென்றபோது, கரைபுரண்டு ஓடும் நீரில் தவறி விழுந்தார்.

சிறிது தூரம் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி அங்கிருந்த மரக்கிளை பற்றிக்கொண்டு இருந்த நிலையில், அவரது கூச்சலை கேட்டு அப்பகுதிக்கு வந்த இளைஞர்கள் ஆற்றில் இறங்கி பத்திரமாக மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments