ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!

0 5623
ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவியிடம் வம்பு செய்ததால், ஊரைவிட்டு அடித்து துரத்தப்பட்ட சைக்கோ இளைஞர் ஒருவர் , 6 வருடங்கள் கடந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் அதே மாணவியை பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக் கொன்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த செல்லரப்பட்டி ஊராட்சி பகுதியில் வசிக்கும் விவேகானந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

கந்திலி காவல்துறையின் விசாரணையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் காலில் அணிந்திருந்த செருப்பை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர் செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசனின் மகள் 22 வயதான சந்தோஷ் பிரியா என்பது தெரியவந்தது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காண பயிற்சி மையத்துக்கு சென்ற சந்தோஷ் பிரியா கடந்த ஜூன் மாதம் 22 ந்தேதி காணாமல் போனதாகவும், தனது மகள், யாரோ ஒரு பையனை காதலித்து வந்த நிலையில், அவனுடன் ஓடிச்சென்று இருக்கலாம் என்று நினைத்து தேடாமல் இருந்துள்ளனர்.

கடந்த 23ந்தேதி அன்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது சந்தோஷ் பிரியா என்பது தெரியவந்ததும் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கண்டெடுக்கப்பட்ட சந்தோஷ் பிரியாவின் செல்போனை வேறு ஒருவர் உபயோகித்து வந்ததை கண்டு பிடித்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் இந்த செல்போனை தன்னிடம் விற்றதாக அவர் தெரிவித்து உள்ளார்.

போலீசார் செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற 25 வது இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

சந்தோஷ் பிரியாவின் வீடும், மகேந்திரனின் வீடும் அருகருகில் உள்ள நிலையில், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பள்ளியில் படித்து வந்த சந்தோஷ் பிரியா, காலையில் குளிப்பதை மறைந்திருந்து பார்த்து விபரீத சேட்டையில் ஈடுபட்ட மகேந்திரனை பிடித்து தர்ம அடி கொடுத்து ஊரைவிட்டே விரட்டி உள்ளனர்.

கடந்த 6 வருடங்களாக வெளியூரில் தங்கி வேலை செய்து வந்த மகேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்து திருப்பத்தூரில் டெலிவரி பாய் வேலைக்கு சேர்ந்துள்ளான்.

வருடங்கள் கடந்து சந்தோஷ் பிரியா 22 வயது பெண்ணான நிலையிலும் அவள் மீது ஒரு தலை காதல் கொண்ட சைக்கோ போல சுற்றிய மகேந்திரனுக்கு அந்தப்பெண் வேறு ஒரு இளைஞரை காதலிப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று டி.என்.பி.எஸ் சி தேர்வுக்காண பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சந்தோச பிரியாவை பின் தொடர்ந்த மகேந்திரன் ஆள் அரவம் இல்லாத இடத்தில் வைத்து வழிமறித்துள்ளான்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரியா, மகேந்திரனை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனால் மிருகமாக மாறிய மகேந்திரன் அந்தப்பெண்ணை கடுமையாக தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.

மயக்கம் அடைந்த சந்தோச பிரியாவை அங்கேயே விட்டுச்சென்றால் மாட்டி கொள்வோம் என்று பயந்து கை,கால்களை துப்பட்டாவால் கட்டி அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசி சென்றது விசாரணையில் தெரியவந்ததாக கந்திலி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து பலாத்காரம்.மற்றும் கொலை வழக்கில் காமுக சைக்கோ மகேந்திரனை கைது செய்த போலீசார் நிதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments