பார்த்தா-ஆர்பிதாவின் வங்கிக் கணக்குகளில் ரூ.500 கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பது கண்டுபிடுப்பு..!

0 3755
பார்த்தா-ஆர்பிதாவின் வங்கிக் கணக்குகளில் ரூ.500 கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பது கண்டுபிடுப்பு..!

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரது கூட்டாளி ஆர்பிதாவின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் 2016 முதல் 2019ம் ஆண்டு வரை 500 கோடி ரூபாய் வரை பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் கைதான இருவரின் குடியிருப்பு முகவரிகளில் செயல்பட்டு வந்த வணிக நிறுவனங்களின் பணபரிவர்த்தனைகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறையினர், இருவரின் வங்கிக் கணக்குகளில் நாள்தோறும் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதை கண்டறியந்துள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் வந்து ஒத்துழைக்குமாறு அமெரிக்காவில் தங்கியுள்ள ஆர்பிதாவின் மகள் மற்றும் மருமகனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments