ஆந்திராவில் பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் மாணவர் உயிரிழப்பு

0 1735

ஆந்திராவின் நந்தியாலா மாவட்டத்தில் காட்டாற்றின் நடுவே பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் மாணவர் உயிரிழந்தார்.

கர்னூலை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர், கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

ராயப்பாடு அருகே கரைபுரண்டு ஓடும் வெள்ளத்துக்கு மத்தியில் பாலத்தை கடக்க முயன்ற கார் திடீரென வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டது.

இதை கவனித்த மக்கள், காரை கயிறு கட்டி மீட்க முயற்சித்தும் பலனளிக்காததால், கண்ணாடிகளை உடைத்து 3 மாணவர்களை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments