புது நகைக்கடையின் பூட்டை அறுத்து 281 சவரன் நகைக்கொள்ளை.. சிசிடிவி கேமராக்களின் வயர்களை துண்டித்து கைவரிசை..!

0 3381
புது நகைக்கடையின் பூட்டை அறுத்து 281 சவரன் நகைக்கொள்ளை.. சிசிடிவி கேமராக்களின் வயர்களை துண்டித்து கைவரிசை..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி புதூர் கிராமத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ஸ்ரீ குமரன் ஸ்வர்ண மஹால் புது நகைக்கடையின் பூட்டை அறுத்து 281 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த தனியார் நகைக்கடையின் பூட்டை ஆக் ஷா பிளேட் கொண்டு அறுத்த கொள்ளையர்கள், கடைக்குள் இருந்த நகைகளை ட்ரேக்களுடன் அள்ளிச் சென்றுள்ளனர். அவர்கள் தப்பியோடிய போது சில மோதிரங்கள் கீழே விழுந்துள்ளன. நகைகளின் ட்ரேக்களை வயல்வெளியில் வீசிவிட்டு கொள்ளையர்கள் தப்பித்துள்ளனர்.

கொள்ளையடிக்கும் முன்பு அவர்கள் நகைக்கடை மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களின் சிசி டிவி கேமராக்களின் வயர்களையும் துண்டித்துள்ளனர். எஞ்சியுள்ள தடயங்களை வைத்து கொள்ளையர்கள் போலீசார் தேடிவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments