சென்னையில் சாலை வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் பலி

0 2639

சென்னை கிண்டி கத்திப்பாரா அருகே மாநகரப் பேருந்து மோதியதில் வழிகாட்டி பலகை சாய்ந்து விழுந்ததில் படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரில், ராட்சத இரும்பு கம்பம் ஒன்றில் பெயர் பலகை அமைக்கப்பட்டிருந்தது. கோயம்பேடு நோக்கி சென்ற மாநகரப் பேருந்து ஒன்று, சாலையோரம் இருந்த அந்த இரும்பு கம்பத்தின் மீது நேற்று வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.

பேருந்து மோதிய வேகத்தில் இரும்பு கம்பத்துடன் பெயர் பலகை சரிந்து, சாலையின் இரு வழிகளிலும் சென்ற இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனம் மீது விழுந்தது. இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் படுகாயமடைந்து பலியானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments