இந்தியா கோவிட்டை வென்றதில் அனைத்து மாநிலங்களுக்கும் பங்குள்ளது-பிரதமர் மோடி

0 2131

இந்தியா கொரோனாவை வென்றதில் அனைத்து மாநில அரசுகளுக்கும் முக்கியப் பங்கு உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக்கின் 7 வது நிர்வாகக் கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் 23 மாநில முதலமைச்சர்கள், மூன்று மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.

வேளாண்மை, கல்விக் கொள்கை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் கூட்டு மனப்பான்மை தான் கோவிட் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வர இந்தியாவுக்கு உதவியது என்று கூறினார். 

இக்கூட்டத்தில் பாஜக அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் தங்கள் கோரிக்கையை பிரதமரிடம் முன்வைத்தனர்.ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments