தலைமை காவலருக்கு சவால்விட்டு தலைமறைவாக இருந்த ரவுடி ஓராண்டுக்கு பிறகு கைது.!

0 2251

மதுரையில் தலைமை காவலருக்கு சவால்விட்டு தலைமறைவாக இருந்த ரவுடியை ஓராண்டுக்கு பிறகு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

பந்தல்குடியை சேர்ந்த ரவுடி ராஜேஷ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மதுரை நகர் தனிப்படை தலைமை காவலர் செந்திலை தொலைபேசியில் அழைத்து, காக்கிச்சட்டையை கழற்றி வைத்துவிட்டு வா சண்டை செய்வோம் என பேசிய ஆடியோ வைரலானது.

இதையடுத்து ரவுடி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அண்டை மாநிலங்களில் பதுங்கிவிட்டு ஓராண்டுக்கு பிறகு மதுரைக்கு வந்த ரவுடியை அவரது வீட்டிலேயே வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments