முதல்முறையாக இந்தியா வந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ராணுவத் தளவாட கப்பல்.!

0 2242

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ராணுவத் தளவாட கப்பல் பழுது நீக்கும் பணிகளுக்காக முதல்முறையாக இந்தியா வந்துள்ளது.

இந்தோ பசிபிக் கடல் பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பல், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் போர் கப்பல்களுக்கு உணவு பொருட்கள், எரிபொருள், கப்பல் பாகங்கள் போன்றவற்றை எடுத்து செல்லும் பணிகளில் ஈடுபட்டிருந்தது.

41,000 டன் சரக்கு எடுத்துசெல்லும் வல்லமை படைத்த இந்த 689 அடி நீள கப்பல் சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள L&T துறைமுகத்திற்கு வந்துள்ளது. பழுது பார்க்க முதல்முறையாக இந்தியா வந்துள்ள அமெரிக்க ராணுவ கப்பலை தேசிய பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் வரவேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments