டிராக்டர் டிரெய்லர் சக்கரத்தில் சிக்கி தாய் கண்முன்னே 2 குழந்தைகள் பலி-செங்கல்பட்டில் சோகம்..!

0 8492

செங்கல்பட்டு அருகே, இருசக்கர வாகனத்தில் தனது 2 குழந்தைகளுடன் சென்ற பெண், டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த ஸ்கூட்டரில் மோதி கீழே விழுந்ததில், டிராக்டரின் ட்ரெய்லர் சக்கரத்தில் சிக்கி இரு குழந்தைகளும் உயிரிழந்தன.

கருநீலம் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்ற பெண் தனது குழந்தைகள் சித்தார்த், லோகேஷ் உடன் ஸ்கூட்டர் வகையிலான இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.

கருநீலம் பிரதான சாலையில் முன்னேச் சென்ற டிராக்டரை வலது புறமாக தேன்மொழி முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த மற்றொரு ஸ்கூட்டர் மோதியதில் தேன்மொழியும் அவரது குழந்தைகளும் டிராக்டரின் ட்ரெய்லர் சக்கரத்திற்கு அருகே விழுந்துள்ளனர். அப்போது, டிராக்டர் ட்ரெய்லர் சக்கரம் ஏறி இறங்கியதில் 2 குழந்தைகளும் தாய் கண்முண்ணே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த தேன்மொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments