சொத்து பிரச்சனை வழக்கை ரத்து செய்வதற்காக ரூ.20,000 லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் கைது

0 1990

சிவகங்கை அருகே இட பிரச்சனை தொடர்பாக இரு இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஒரு வழக்கை ரத்து செய்வதற்காக, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கருங்காலக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஹக்கீம் மற்றும் இவரது சகோதரருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக மதுரை மற்றும் சிவகங்கை குற்றபிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஒரு வழக்கை ரத்து செய்வதற்காக ஆய்வாளர் ராமகிருஷ்ணனை ஹக்கீம் அனுகியுள்ளார். அதற்கு அவர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஹக்கீம் தகவல் தெரிவித்தையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பிய போலீசார், அதனை காவல் ஆய்வாளர் பெறும்போது சுற்றி வளைத்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments