கியூபாவில் எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கியதில் வெடி விபத்து... ஒருவர் உயிரிழப்பு

0 1903

கியூபாவில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கனமழை காரணமாக மடான்சாஸ் சிட்டி நகரில் உள்ள எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கி தீப்பற்றியது. இதனால் அடுத்தடுத்து 4 முறை வெடி விபத்து நிகழ்ந்ததால், எண்ணெய் கிடங்கில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு கரும்புகைமூட்டம் சூழ்ந்தது.

தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்தில் 120 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட எண்ணெய் கிடங்கின் அருகே இருந்த 800 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும், காணாமல் போன 17 தீயணைப்பு வீரர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments