அரசுப் பள்ளியில் படித்துவந்த பிளஸ் 2 மாணவர் தற்கொலை.!

0 2682

கிருஷ்ணகிரி அருகே பிளஸ் 2 மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் அரசு விடுதியில் தங்கி பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு விடுதியில் கேபிள் ஒயரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், அவருக்கு பாதுகாப்பாக இருந்து வந்த அவரது தாத்தா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மரணமடைந்ததாகவும், அந்த மன விரக்தியில் இதற்கு முன்பு மாணவன் இரண்டு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டதும் தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments