விமானம் தாங்கிக் கப்பல் விக்ராந்த்தை பார்வையிட்டார் நடிகர் மோகன்லால்.!

0 25929

கௌரவ ராணுவ லெப்டினன்டாக உள்ள நடிகர் மோகன்லால் கொச்சி கப்பல் கட்டுமானத் தளத்திற்கு சென்று விரைவில் இந்திய கடற்படையில் இணைய உள்ள விமானம் தாங்கிக் கப்பல் விக்ராந்த்தை பார்வையிட்டார்.

விக்ராந்த் கப்பலில் உள்ள மாலுமிகள், தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.இந்திய ராணுவத்தில் பணியாற்றும் மலையாள இயக்குனர் மேஜர் ரவியும் மோகன்லாலுடன் போர்க்கப்பல் விக்ராந்த்தை பார்வையிட்டார்.

பின்னர் தமது டிவிட்டர் பக்கத்தில் தமக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்று குறிப்பிட்டுள்ள மோகன்லால், விக்ராந்த் கப்பல் இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் தொழில்நுட்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments