உனக்கு இதயத்தில் ஓட்டையா..? பிச்சை எடுத்து பணத்தை கட்டு..! இரக்கமில்லா ஈக்வட்டாஸ் வங்கி..! உயிரை மாய்த்துக் கொண்ட பெண்.!

0 4355

கடலூர் மாவட்டம் , ஈக்வட்டாஸ் வங்கியில் பெற்ற 6 லட்சம் ரூபாய் கடனுக்கு 2 தவணை தொகை கட்டாததால் அனுக்கப்பட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்குள் வங்கி ஊழியர்கள் அமர்ந்து கொண்டு ஆபாசமாக திட்டியதாக கூறி பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

கடலூர் மாவட்டம் அனுக்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், இவரது மனைவி ஜெயந்தி, இவர்கள் இருவரும் வீட்டோடு சேர்த்து சிறிய டிபன்கடையுடன் கூடிய டீக்கடையை நடத்திவந்தனர்.

ஜெயந்தி, தொழில் அபிவிருத்திக்காக சில வருடங்களுக்கு முன்பு ஈக்வட்டாஸ் வங்கியில் கடன் பெற்ற நிலையில், முறையாக தவணை தொகை செலுத்தி வந்ததால், ஈக்வட்டாஸ் வங்கி அதிகாரிகள் டாப் அப் லோன் தருவதாக கூறி உள்ளனர்.

அந்த பணத்தை பெற்று வீடு கட்டியதுடன், மகளின் திருமணத்தையும் நடத்தி முடித்துள்ளார். தான் பெற்ற மொத்த கடன் தொகையான 6 லட்சம் ரூபாய்க்கு மாதந்தோறும் முறையாக தவணை தொகை செலுத்தி வந்த ஜெயந்தியால் கடந்த இரு மாதங்கள் தவணை தொகை கட்ட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு போன் மூலம் ஜெயந்தியை கடுமையாக பேசிய வங்கி ஊழியர்கள், வெள்ளிக்கிழமை 3 மணிக்கு ஜெயந்தியின் வீட்டுக்கு நேரடியாக சென்று தரக்குறைவாக ஆபாசமாக பேசியதோடு மாலை 3 மணியில் இருந்து 6 மணிவரை வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு அவரை அவமானப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்குள்ளான ஜெயந்தி நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஜெயந்தியின் உடலை மீட்டு பிணகூறாய்வுக்கு எடுத்துச்சென்ற நிலையில் தனியார் வங்கி ஊழியர்கள் மீது குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் விசாரித்து வரும் நிலையில் இதே ஈக்வட்டாஸ் வங்கியின் மேலாளர் ஆனந்த் கடந்த வாரம் தவணை தொகை கட்டாத கருணாமூர்த்தி என்பவரை தொடர்பு கொண்டு கடுமையாக பேசும் ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் உடல் நிலை சரியில்லை என்ற கருணாமூர்த்தியிடம், இதயத்தில் உனக்கு பெரிய ஓட்டையா கிடக்கு, பிச்சை எடுத்தாவது பணத்தை கட்டு என்று ஆனந்த் கடுமையாக மிரட்டுகிறார்.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு கடலூர் எஸ்.பி விசாரித்து வரும் நிலையில், அதே ஈக்வட்டாஸ் வங்கி ஊழியர்களின் மிரட்டலால் ஒரு பெண் உயிரை மாய்த்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கி தரப்பில் தாங்கள் கொடுத்த கடனுக்குரிய நிலுவையான தவணை தொகையை மட்டுமே கேட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments