பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை ; பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு

0 3758
பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை ; பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு

நெல்லை தச்சநல்லூரில் பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவும் சூழலில், அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

கட்டிடத் தொழிலாளியான பேச்சிராஜாவுக்கு திருமணமாகி 3 மாத கைக்குழந்தை உள்ளது. காலை வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற பேச்சிராஜாவை தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.

தகவலறிந்து வந்த உறவினர்கள் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வலுக்கட்டாயமாக போலீசார் உடலை கைப்பற்றியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கடந்த 2019ல் கரையிருப்பு பகுதியில் நடந்த கொலை வழக்கில் பேச்சிராஜா குற்றவாளியாக சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில், அந்த கொலைக்கு பழிக்கு பழியாக அவர் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments