விரக்தியால் விபரீதம்... இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை..!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே குறைபிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தால் விரக்தியடைந்த தாய், குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பனங்காடு பகுதியைச் சேர்ந்த சபரீஷ் - சரளா தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், மீண்டும் கருவுற்ற சரளாவுக்கு கடந்த மாதம் குறைபிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இதனால் சரளா விரக்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், தாய் வீட்டில் தங்கியிருந்த சரளா இன்று அதிகாலை குழந்தைகளுடன் காணாமல் போனதால் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சரளா சடலமாக மீட்கப்பட்டார். 5 மணி நேர போராட்டத்துக்கும் பின் இரண்டு பெண் குழந்தைகளின் சடலங்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments