திருப்பதியைச் சேர்ந்த பெண்னை இந்து முறைப்படி கரம் பிடித்த அமெரிக்கா நாட்டு இளைஞர்!

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், திருப்பதியைச் சேர்ந்த பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.
திருப்பதியைச் சேர்ந்த ஹர்ஷவி என்ற பெண் பி.டெக் முடித்து அமெரிக்காவில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அங்கு பொது மேலாளராக பணியாற்றும் அமெரிக்காவை சேர்ந்த டொமியன் பிராங்க் என்ற நபருடன் ஹர்ஷவிக்கு காதல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால், மாப்பிள்ளை டொமியன் பிராங்க் இந்தியாவில் இந்து முறைப்படி திருமணத்தை நடத்த விரும்பியதால், இவர்களது திருமணம் திருப்பதியில் இருவீட்டாரின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
Comments