அண்ணாமலையின் செயல்திட்டங்களை பார்த்து எதிர்கருத்துள்ள கட்சிகள் பயப்படுகின்றன - சி.டி. ரவி!

0 1573

தமிழகத்தில் பாஜக நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே இருப்பதாகவும், மாநில தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டங்களை பார்த்து எதிர்கருத்துள்ள கட்சியினர் பயப்படுவதாகவும், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி .ரவி தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த அவருக்கு விமானநிலையத்தில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறும் திமுகவும், காங்கிரசும் அதற்கான ஆதாரம் இருந்தால் காட்ட வேண்டும் என்றும், திமுக மற்றும் காங்கிரஸின் முழுநேர வேலையே ஊழல் செய்வதுதான் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments