இளம் பெண்ணை ஆபாசமாக திட்டி தாக்க முயற்சித்த பாஜக பிரமுகர்.. பெண்ணின் புகாரை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு!

டெல்லியை அடுத்த நொய்டாவில் ஸ்ரீகாந்த் தியாகி என்ற பாஜக பிரமுகர் இளம் பெண்ணை ஆபாசமாக திட்டி தாக்க முயற்சித்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
இங்குள்ள செக்டர் 93 பி பகுதியில் மரங்களை நடுவதற்கு போன ஸ்ரீகாந்த் தியாகிக்கு அப்பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஆட்சேபம் கூறியதை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் வலுத்தது.
அப்போது அந்தப் பெண்ணை அவமதிக்கும் வகையில் ஆபாசமாகப் பேசிய பாஜக பிரமுகர் தாக்கவும் முயற்சித்தார்
இது தொடர்பான பெண்ணின் புகாரை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
Comments