மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா” விருது - கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு

0 2042

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடகாவின் உயரிய விருதான “கர்நாடக ரத்னா” விருதை வழங்கவிருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு லால்பாக் கண்ணாடி மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்த பின் பேசிய அவர், இதுகுறித்து அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஆம் தேதி புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கி அம்மாநில அரசு கௌரவப்படுத்த உள்ளது.

கன்னடத் திரையுலகின் முக்கிய நட்சத்திரமான புனித் ராஜ் குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments