இந்திய ரயில்வேயில் மேலும் 1.4 லட்சம் பேருக்கு விரைவில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் - ரயில்வே அமைச்சர் தகவல்

இந்திய ரயில்வே துறையில் 2014-ல் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரை வேலையில் அமர்த்துவதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், 10 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தில் ரயில்வே துறைதான் அதிக பங்களிப்பை அளித்துள்ளது என தெரிவித்த அவர், நடப்பு ஆண்டில் மட்டும் 18 ஆயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகம் கூறினார்
Comments