அல்கொய்தா தலைவர் காபூலில் பதுங்கி இருந்தது எங்களுக்குத் தெரியாது - தாலிபான்

0 2082

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அல் கொய்தா தலைவர் அய்மன் அல் - ஜவாஹிரி பதுங்கி இருந்தது தங்களுக்குத் தெரியாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 31ஆம் தேதியன்று, காபூலின் மையப்பகுதியில் பதுங்கியிருந்த அய்மன் அல் - ஜவாஹிரி, அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அவர் எப்போது காபூல் வந்தார் என்பது பற்றி தெரியாது என்றும், அது குறித்து தீவிர விசாரணை நடத்த புலனாய்வு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments