குஜராத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
கம்போய் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோகிலாபென், தன்னுடைய நிலத்திற்கு சென்றபோது மண்ணுக்குள் இருந்து குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டுள்ளார்.
விவசாயி அளித்த தகவலின்பேரில் விரைந்து சென்ற போலீசார், பிறந்து சில மணிநேரங்களிலேயே மண்ணில் புதைக்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, குழந்தையை மண்ணில் புதைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
Comments