மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மாணவர்களுக்கு மாத்திரை விநியோகம் -மருந்தக உரிமையாளர் கைது

0 3465

மதுரையில் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் நரம்பு தளர்ச்சி நிவாரணி மாத்திரைகளை  மாணவர்களுக்கு விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், மருந்தகத்திற்கு சீல் வைக்க பரிந்துரைத்தனர்.

காமராஜர் சாலையில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் மயக்கநிலையில் இருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அப்பகுதிக்கு சென்றனர்.

விசாரணையில் அருகிலுள்ள மருந்தகத்தில் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்த நிலையில், நேரடியாக காவல் உதவி ஆணையர் மாணவர்களிடம் பணம் கொடுத்தனுப்பி அதே மருந்தகத்தில் மத்திரை வாங்கி வர கூறியுள்ளார்.

மாணவர்கள் மாத்திரையுடன் வந்ததையடுத்து மருந்தக உரிமையாளர் தங்கராஜை போலீசார் கைது செய்தனர். மேலும், மருந்தககத்துக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments