நீதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் ஓபிஎஸ்..!

0 4116

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவது குறித்த கடிதம் தொடர்பாக நேற்றைய விசாரணையின் போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய பன்னீர்செல்வம் தரப்பு, அதனை நீதிபதி தெரிவித்தபடி எழுத்துப்பூர்வ மனுவாக தாக்கல் செய்ய மறுப்பு தெரிவித்தது.

பின்னர் நீதிபதி அறிவுறுத்தியபடி, தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்றது குறித்து ஓ.பி.எஸ். தரப்பில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை என்றும் புதிய நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே கடிதம் அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மனுவை பதிவு செய்தபின், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா? வேண்டாமா? என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். அதுவரை இந்த வழக்கை விசாரிக்கவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments