தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

0 2441

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு 7, 8, 9 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

ஆகஸ்டு 9 வரை மன்னார் வளைகுடாப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments