ஆம்னி பேருந்து-சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து... 2 பயணிகள் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம், குண்டடம் நான்குச் சாலையில் ஆம்னி பேருந்து ஒன்று சரக்கு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
நெல்லையில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று கடந்த 30ம் தேதி அதிகாலை திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. குண்டடம் நால்ரோடு அருகே சென்ற போது, குண்டடம் மாட்டுச்சந்தைக்கு சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது எதிரே வந்த பேருந்து நேருக்கு நேர் மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 2பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து குண்டடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments