காமன்வெல்த் போட்டிகளின் ஏழாவது நாள் ஆட்டத்தில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றது இந்தியா!

0 2574

பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளின் ஏழாவது நாள் ஆட்டத்தில் இந்தியா ஒரு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதல் போட்டியில் 134.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சுதிர், இந்தியாவிற்கு 6-வது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார்.

நீளம் தாண்டுதல் போட்டியில் கேரளாவை சேர்ந்த முரளி ஸ்ரீஷங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகள் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் நீளம் தாண்டுதலில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் அமிட் பங்கல், சாகர் அலாவட் பெண்கள் பிரிவில் ஜாஸ்மின் லம்போரியா ஆகியோர் வெற்றி பெற்று, குறைந்தபட்சம் 3 வெண்கலப்பதக்கங்களை உறுதிசெய்துள்ளனர்.

6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments