ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் திருட்டில் ஈடுபட்ட காவலர் கைது

0 2055

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளர் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் இருசக்கர வாகனத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய காவலர் கைது செய்யப்பட்டார்.

கண்காணிப்பாளர் சுபம் கோஷ் வீட்டில் வேலை செய்யும் மகேஸ்வரி என்பவர், கடந்த 26ஆம் தேதியன்று தனது இருசக்கர வாகனத்தில் கைப்பையில் வைத்திருந்த பணம் மாயமானதாக புகாரளித்தார்.

சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் விசாரித்த போலீசார், சீருடையுடன் பணத்தை திருடிய காளிதாஸ் என்ற காவலரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments