காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய வயது முதிர்ந்த தம்பதி-போராடி மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்

0 3106

தருமபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய வயது முதிர்ந்த தம்பதியை காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உள்ள நிலையில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நடுவில் கோவில் கட்டி அங்கேயே வசித்து வந்த குருசாமி-பங்காரு தம்பதியினர், ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

தகவலின் பேரில் இருவரையும் தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments