ப்ரன்ச் பிரைஸ் பிரச்சனை.. மெக்டொனால்டு ஊழியர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை..! இதுக்கெல்லாமாவா சுடுவாய்ங்க..?

0 2466
ப்ரன்ச் பிரைஸ் பிரச்சனை.. மெக்டொனால்டு ஊழியர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை..! இதுக்கெல்லாமாவா சுடுவாய்ங்க..?

மெக் டொனால்டு உணவகத்தில் பிரன்ஞ் பிரைஸ் ஏன் குளிராக இருக்கின்றது ? என்று கேள்வி எழுப்பிய பெண்ணிடம் குறும்பாக பதில் அளித்த ஊழியரை அந்த பெண்ணின் மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகத்தின் 100 நாடுகளில் 40 ஆயிரத்துக்கும் மேலான கிளைகளைபரப்பி உள்ள பிரசித்திப்பெற்ற மெக்டொனால்டு உணவகத்தின் நியூ யார்க்கின் புரூக்லின் பெட் - ஸ்டை பகுதி கிளையில் தான் இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது.

இந்த மெக்டொனால்டு கிளையில் சூடாக ப்ரன்ஞ் பிரைஸ் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்த பெண்மணிக்கு ஆறிப்போன ப்ரன்ஞ் பிரைஸ் பரிமாறப்பட்டு உள்ளது. ஏன் ப்ரன்ஞ் பிரைஸ் குளிராக உள்ளது ? என்று அந்த பெண்மணி கேட்க, மெக்டொனால்டு ஊழியர் கெவின் ஹால்லோ மென் என்பவர் குறும்பாக பதில் அளித்ததோடு மேலாளரிடம் புகார் செய்யுங்கள் என்று கூறி உள்ளார்.

அவரது பதிலால் வெறுப்பான அந்த பெண்ணின் மகன் மைக்கேல் மார்கோன் என்பவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த ஊழியரை சுட்டுக் கொலை செய்ததாக கூறப்படுகின்றது

இதையடுத்து மைக்கேல் மார்கோனை கைது செய்த நியூ யார்க் போலீசார், மைக்கேல் இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டும் மேத்யூ என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர். ((spl gfx out)) அவரது தாய் தனது மகன் செய்தது சரி என்பது போல போலீசாரிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments