யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பு.. இருவரின் பின்னணி என்ன? தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை

0 2803

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்ட இருவரின் பின்னணி குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மே மாதம் புளியம்பட்டியில் வாகன சோதனையில் பிடிபட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகிய இரண்டு இளைஞர்களிடம் இருந்து முழுமையாக தயாரிக்கபடாமல் இருந்த கைத்துப்பாக்கி, பெரிய துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிப்பதற்கான கருவிகள், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளனர்.

இந்த வழக்கு குறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள், கைது செய்யப்பட்ட இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கும் மற்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments