எவ்வளவு விபத்து நேரிடுகிறது என்று தெரியுமா?ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளர்

0 2077

ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறி, சேலத்தில், காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை சாலையோரமாக நிறுத்திய காவல் உதவி ஆய்வாளர், ஹெல்மெட் அணியாததால் எவ்வளவு விபத்து நேரிடுகிறது என்று தெரியுமா? மருத்துவமனையில் வந்து பாருங்கள்... அப்போது தான் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் கதறல் சத்தம் உங்களுக்கு கேட்கும் என்று கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அதோடு, நீங்கள் கட்டும் வரி பணத்தில் தான் நாங்கள் சம்பளம் வாங்குகிறோம் என்றும் உங்களது உயிரையே காப்பாற்றவில்லை என்றால் எதற்காக இந்த போலீஸ் என்றும் உரக்கக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments