விவசாயிகளின் பயன்பாட்டிற்கு குறைந்த வாடகையில் இயங்கும் 50 டிராக்டர்கள்.. கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர்

0 2091

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் இயங்கும் தமிழக வேளாண்துறையின் 50 டிராக்டர்களை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புதிய சார் கருவூல அலுவலக கட்டிடங்களையும், 2 வருவாய் கோட்டாட்சியர் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல்துறையை சேர்ந்த 13 பேர் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments