எகிப்தில் சிற்றுந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

0 1818

எகிப்தில் சிற்றுந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கெய்ரோவுக்கு 390 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொஹாங் மாகாணத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சிற்றுந்து மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது.

விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சாலை பாதுகாப்பில் மிகவும் பின்தங்கியுள்ள எகிப்தில், ஆண்டுதோறும் வாகன விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments