தூக்க மாத்திரை தர மறுத்த மருந்துக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்

0 3457

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தூக்க மாத்திரை தர மறுத்த மருந்துக்கடை உரிமையாளரை இருவர் சரமாரியாக தாக்கும் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.

வடவேர் பகுதியைச் சேர்ந்த செந்தில், குடவாசலில் இயங்கி வரும் சூர்யா மெடிக்கல் ஷாப்பிற்கு வந்து நாள்தோறும் தூக்க மாத்திரை கேட்டு தொந்தரவு செய்து வந்தததாக கூறப்படும் நிலையில், மருந்து சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை வழங்க மருந்துக்கடை உரிமையாளர் ரவிக்குமார் மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு தனது அண்ணன் மகன் இமயவரம்பனுடன் மருந்துக்கடைக்கு வந்த செந்தில், ரவிக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து சிசிடிவிக் காட்சி ஆதாரங்களுடன் ரவிக்குமார் குடவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments