ஸ்ரீமதி விழுந்த மொத்த சிசிடிவி காட்சியையும் வெளியிட மறுப்பது ஏன் ? போலீசுக்கு மாணவியின் தாய் கேள்வி

0 3625
ஸ்ரீமதி விழுந்த மொத்த சிசிடிவி காட்சியையும் வெளியிட மறுப்பது ஏன் ? போலீசுக்கு மாணவியின் தாய் கேள்வி

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில், தனது மகள் விழுந்த சிசிடிவி காட்சியை, போலீசார் மொத்தமாக வெளியிடாமல், துண்டு துண்டாக வெளியிடுவது ஏன் என்று மாணவியின் தாய்  கேள்வி எழுப்பி உள்ளார்.

கள்ளக்குறிச்சி கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 12 ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் , சிபிசிஐடி போலீசார் வசம் இருக்கும் சிசிடிவி காட்சிகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

முதலில் அந்த மாணவி பள்ளி வளாகத்தில் நடமாடும் காட்சியும், மாடிக்குச் செல்லும் காட்சியும் வெளியான நிலையில், மாணவியை காவலாளி மண்ணாங்கட்டி, சாந்தி மற்றும் இரு ஆசிரியைகள் அதிகாலையில் தூக்கிச்செல்லும் காட்சியும் வெளியானது.

மாணவி தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் பிட்டு பிட்டாக வெளியாகி வருவது எப்படி ? என்றும் முழு வீடியோவையும் போலீசார் தங்களிடம் காண்பிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் காசி விஸ்வ நாதன் தெரிவித்தார்

முதலில் 13 ந்தேதியே தன்னிடம் சிசிடிவி காட்சி காண்பிக்கப்பட்டதாக கூறிய மாணவியின் தாய் செல்வி, பின்னர் தன்னிடம் எந்த ஒரு சிசிடிவி காட்சியும் காண்பிக்கவில்லை என்று மறுத்ததோடு, தனது மகள் விழுந்து இறந்தது உண்மை என்றால் மொத்த சிசிடிவி காட்சியையும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments