ரீல்ஸ்-சுக்காக அருவி பாறையில் அலப்பறை.. தவறி விழுந்த தம்பி ..! வெளியானது அதிர்ச்சி வீடியோ ..!
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அடுத்த புல்லாவெளி அருவியில் ரீல்ஸ்சுக்காக பாறையில் இறங்கி வீடியோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர் கால் வழுக்கி அருவிக்குள் விழுந்த காட்சி வெளியாகி உள்ளது. விபரீத வீடியோ ஆசையால் ஆர்ப்பரிக்கும் அருவியில் சிக்கி மாயமான இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று நண்பருடன் அருகில் உள்ள புல்லாவெளி அருவிபகுதிக்கு சென்றுள்ளார்.
கடந்த சில தினங்களாக தொடரும் மழை காரணமாக புல்லாவெளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. தனது தைரியத்தை ரீல்ஸ் மூலமாக பிரபலப்படுத்த நினைத்த அஜய்பாண்டியன், அந்த அருவியின் முன்பாக நின்று வீடியோ எடுத்து ரீல்ஸ் செய்ய திட்டமிட்டார். அதன்படி பாறையில் இறங்கி கையை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்த, நண்பர் அதனை வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்தார்
அத்தோடு மேலே ஏறி இருக்கலாம் அதை விடுத்து ஈரமான பாறையில் அடுத்த அடி எடுத்து வைத்த அஜய்பாண்டியன் கால் பாறையில் வழுக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிக்குள் தவறி விழுந்தார். வீடியோ எடுத்த நண்பர் பதற்றத்தில் அலறித் துடித்தார்.
வழுக்கி விழுந்த அஜய்பாண்டியன் நிலை என்னவானது என்பது தெரியாத நிலையில் திண்டுக்கல் மாவட்ட போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு தேடி வருகின்றனர்.
கடல் மட்டத்தில் இருந்து பல நூறு அடிகள் உயரம் கொண்ட அந்த அருவி பாதை கரடு முரடான பாறைகளை கொண்டது என்று கூறப்படுகின்றது. பாய்ந்தோடும் இந்த அருவி தண்ணீர் திண்டுக்கல் காமராஜர் நீர்த்தேக்கத்தை சென்றடைகின்றது. ((spl gfx out))செல்ஃபி மாற்றும் வீடியோ ரீல்ஸ் மோகம் சிலருக்கு ரிலாக்ஸ்சாக இருக்கலாம், ஆனால் இது போன்ற இடங்களில் நின்று வீடியோ எடுக்கும் விபரீத முயற்சிகள் உயிருக்கு ரிஸ்க் ஆகி விடும் என்பதற்கு இந்தச்சம்பவமே சாட்சி..!
Comments