பணம் வசூலிப்பதில் தில்லு முல்லு.. 2ஆவது முறையாக பணம் கேட்ட உணவக ஊழியர் மீது தாக்குதல்

சென்னை பெரவள்ளூர் அண்ணா சாலை ஜி. கே. எம் ஜம்புலிங்கம் தெருவில் உள்ள உணவகம் ஒன்றில் நள்ளிரவில் வாடிக்கையாளரிடம் உணவு ஆர்டர் கொடுத்த போதே, பணம் பெற்றுக் கொண்ட உணவக ஊழியர், உணவு வழங்கிய பின்னரும் பணம் கேட்டு தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர் தனது நண்பரை அழைத்து வந்து உணவக ஊழியரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
பெரவள்ளூர் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நான்கு பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
Comments