ஜனநாயகமா? சர்வாதிகாரமா ? - அமெரிக்கா.... போர் பயிற்சியில் இறங்கிய சீனா....

0 2504
தைவான் உள்ளிட்ட உலகநாடுகளில் ஜனநாயகத்தை பாதுகாக்க அமெரிக்கா இரும்பு கவசம் போல் செயல்படும் என்று சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற நான்சி பெலோசி கூறியுள்ளார்.

தைவான் உள்ளிட்ட உலகநாடுகளில் ஜனநாயகத்தை பாதுகாக்க அமெரிக்கா இரும்பு கவசம் போல் செயல்படும் என்று சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற நான்சி பெலோசி கூறியுள்ளார்.

ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான காலகட்டத்தில் உலகம் இன்று உள்ளது என்று அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பேலோசி கூறியுள்ளார். சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நேற்றிரவு தைவான் சென்றடைந்த அவர், அந்நாட்டு அதிபர் சைஇங்-வென்னை சந்தித்து பேசினார்.

பின்னர் அங்கு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தைவான் உள்ளிட்ட உலகநாடுகளில் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அமெரிக்காவின் நிலைபாடு இரும்பு கவசம் போல் இருக்கும் என கூறினார்.

ஆனால், நான்சி பெலோசியின் தைவான் பயணம் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

தைவான் அருகே ஏவுகணை சோதனை, ராணுவ ஒத்திகை மேற்கொள்ள இருப்பதால் தைவான் வான்பகுதியில் பறப்பதை தவிர்க்குமாறு ஆசிய நாடுகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள விமான நிறுவனங்களை சீனா அறிவுறுத்தியுள்ளது. தைவானை ஒட்டிய 6 வான்வழி தடங்களை அபாயகரமான மண்டலமாக சீனா அறிவித்துள்ளது.

இதனால் நாளை நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நள்ளிரவு வரை கொரியா தனது விமானங்களை ரத்து செய்துள்ளது. இதேபோல், தென்கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் பல விமானங்ளை மாற்று வழி தடங்களில் இயக்க முடிவு செய்துள்ளன. ஆனால், வழக்கம் போல் விமானங்கள் இயக்கப்படும் என்று ஜப்பான் அறிவித்துள்ளது.

இதனிடையே, நான்சி பெலோசியின் தைவான் வருகையால், தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 2000 உணவுப்பொருட்களுக்கு தடை விதித்துள்ள சீனாவால், அமெரிக்கா மற்றும் தைவான் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.

ஏற்கனவே பொருளாதார சிக்கல் மற்றும் விநியோக சங்கிலி பாதிப்பால் சீனாவுக்கு சிக்கல்கள் உள்ளதால், ராணுவ நடவடிக்கையை முன்னிறுத்தியே சீனா தனது பதிலடியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது

இதனிடையே, சீனாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று போர் விமானங்கள் புடைசூழ தைவான் சென்ற அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி இன்று தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். தமது தைவான் பயணம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமது குழு தைவான் அதிபருடன் தனித்துவமான சிறந்த சந்திப்பை மேற்கொண்டதாக கூறியுள்ளார். அமெரிக்கா-தைவான் இடையே பொருளாதார, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஜனநாயக மாண்பு பரிமாற்றம் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் நான்சி குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments