விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில்கள் அறிமுகம் - அமைச்சர் நாசர் அறிவிப்பு

0 2645
தமிழகத்தில் விரைவில் ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் பாட்டில்கள் அறிமுகம் செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் பாட்டில்கள் அறிமுகம் செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இருப்பதாகவும் அதன் மூலம் ஒரு லிட்டர், அரை லிட்டர் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் விற்பனை கடந்த ஆட்சியில் 26 லட்சம் லிட்டராக இருந்த நிலையில், தற்போது 28 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments