குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு..!

குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குமாரபாளையம் பகுதியில் உள்ள இந்திரா நகர், கலைமகள் தெரு, மற்றும் மணிமேகலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Comments