செஸ் ஒலிம்பியாட் : போட்டிகளைக் காண இதுவரை ரூ.40 லட்சத்துக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை..!

0 7975
செஸ் ஒலிம்பியாட் : போட்டிகளைக் காண இதுவரை ரூ.40 லட்சத்துக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை..!

44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை 40 லட்சம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையாகி உள்ளது.

மாமல்லபுரத்தில் 2 அரங்குகளில் நடைபெறும் செஸ் போட்டிகளைக் காண இணையதளத்தின் வாயிலாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் என தனித் தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மொத்தமாக 6 ஆயிரத்து 500 டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் தற்போது வரை 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments