உக்ரைன் படைகளுக்கு அமெரிக்கா நேரடியாக உதவுவதாக ரஷ்யா குற்றச்சாட்டு..!

உக்ரைன் படைகளுக்கு அமெரிக்கா நேரடியாக உதவுவதாக ரஷ்யா குற்றச்சாட்டு..!
போரில் உக்ரைன் படைகளுக்கு அமெரிக்க உளவாளிகள் நேரடியாக உதவுவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியபோதும், போரில் நேரடியாகக் களமிறங்கப்போவதில்லை எனக் கூறி வந்தது.
இந்நிலையில், ரஷ்யப் படைகள் மீது நிகழ்த்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களை அமெரிக்கா ஒருங்கிணைத்ததாக உக்ரைன் ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டிய ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் தங்கள் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது நிகழ்த்தப்பட்ட அந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், அந்த தாக்குதலை அமெரிக்க உளவாளிகள் நேரடியாக ஒருங்கிணைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
Comments