நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை பத்திரமாக மீட்ட கடலோர காவல்படையினர்.!

0 756

கேரள மாநிலம் திருச்சூர் அருகே அரபிக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

கடற்சீற்றம் மற்றும் பலத்த காற்றின் காரணமாக கரைக்கு திரும்ப முடியாமல் ஆழ்கடலில் படகுடன் மீனவர்கள் தத்தளித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த இந்திய கடலோர காவல்படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் படையினர் நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனவர்களை படகுடன் மீட்டு கொண்டுவந்தனர்.

இதையடுத்து, ஆலப்புழாவில் என்ஜின் பழுதடைந்த படகை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் கண்டு மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments