அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம்.. அமைச்சர், அதிகாரிகள் நேரில் ஆய்வு..!

0 1485
அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம்.. அமைச்சர், அதிகாரிகள் நேரில் ஆய்வு..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பது தொடர்பான சாத்தியகூறுகள் குறித்து 4 மாதத்திற்குள் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.

கீழக்கரை கிராமத்தில் தேர்வுசெய்யப்பட்ட இடத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இந்த ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக ஏற்கனவே கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ரத்துசெய்யப்படுவதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments